H1B விசா விவகாரம்!.. தனக்குத் தானே குழி வெட்டி படுத்துக் கொண்ட அமெரிக்கா!.. இந்தியர்களின் சாய்ஸ் இனிமே 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > உலகம்H1B விசா விவகாரத்தில் அமெரிக்கா செய்த கொள்கை தவறால், இந்தியர்கள் வேறு ஒரு புதிய ரூட்டை கண்டறிந்துள்ளனர்.

மார்ச் 2021ல் அமெரிக்காவில் பணி புரிய அளிக்கப்படும் 85,000 H1B விசாக்களுக்கு, 3.08 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய இந்த ஆய்வு நிறுவனம், இவற்றில் 72 சதவீத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுவதற்கு முன்பே நிராகரிக்கப்படுவதாக கூறியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது மூன்று வகையான விசாக்களின் அடிப்படையில், 9.15 லட்சம் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 2030ல் இவர்களின் எண்ணிக்கை 21.95 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2016ம் ஆண்டை விட 2018ல் அமெரிக்க பல்கலைகழகங்களில் முதுகலை கம்ப்யூட்டர் பொறியியல் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க கொள்கைக்கான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழங்களில் முதுகலை கம்ப்யூட்டர் பொறியியல் பயிலும் மாணவர்களில் 75 சதவீதத்தினர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவர். இவர்களில் முன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, 2016ம் ஆண்டை விட 2018ல் கனடா பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 127 சதவீதம் அதிகரித்து, 1.72 லட்சமாக அதிகரித்துள்ளது. தவறான விசா கொள்கைகளின் காரணமாக, திறமை வாய்ந்த இந்தியர்கள், அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு பெரிய அளவில் செல்லத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான விசாரணை குழுவினரிடம், அமெரிக்க கொள்கைக்கான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
