அதிக குழந்தைகள் பெற்ற பெற்றோருக்கு ‘ரூ.1 லட்சம்’ பரிசு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்.. எந்த மாநிலம் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிக குழந்தைகள் பெற்ற பெற்றோருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மிசோரம் மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலம் மொத்தம் 21,087 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில், கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,91,014 மக்கள் வசிக்கின்றனர். அதாவது ஒரு சதுர கிமீ பரப்புக்கு 52 நபர்கள் என்ற வீதத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் அம்மாநிலத்தில் தற்போது மக்கள் தொகை குறைந்து வருகிறது.
இதனால் மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க பல அறிவிப்புக்களை அம்மாநில அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மிசோரம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே ( Robert Romawia Royte) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ஜஸ்வால் (Aizawl) கிழக்கு பகுதியில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுள்ள பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு சான்றிதழும், கோப்பையும் வழங்கப்படும். மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதனால் பல்வேறு துறைகளில், வளர்ச்சி அடைய தேவையான அளவை விட மக்கள் தொகை மிகவும் குறைந்துள்ளது. இது மிக முக்கியமான பிரச்சினை. மேலும் இது மிசோரம் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்கும் தடையாக உள்ளது’ என அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
