வெறும் 30 நிமிஷம் தான் ஜோ பைடன் 'போன்'ல பேசினாரு...! 'இதான்' விஷயம், என்ன சொல்றீங்க...? - 'உலகமே' உற்றுநோக்கும் 'ஆக்கஸ்' விவகாரத்தில் 'அதிரடி' திருப்பம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆக்கஸ் (aukus) விவகாரத்தில் தங்களுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை ஏற்பட்டதையடுத்து அமெரிக்காவும் (America) பிரான்ஸும் (France) புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் (Joe Biden) பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் தொலைபேசியில் கடந்த புதன்கிழமை (22-09-2021) உரையாடியுள்ளனர்.
முப்பது நிமிடங்கள் நடந்த இந்தப் பேச்சுவாா்த்தையில், ஆக்கஸ் கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை விற்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள பைடனும் மேக்ரானும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதன்படி, நீா்மூழ்கி ஒப்பந்த விவகாரத்தில் வெளிப்படையான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பைடன் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திரும்ப அழைக்கப்பட்ட தங்களது தூதரை மீண்டும் அமெரிக்கா அனுப்ப மேக்ரான் ஒப்புக்கொண்டுள்ளார்.
இரண்டு தலைவா்களும் அடுத்த மாதம் ஐரோப்பாவில் சந்திக்க உள்ளார்கள் என்று பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரி வரும் சீனா, அங்குள்ள தீவுகளை ராணுவ மயமாக்கி வருகிறது.
சா்வதேச கடல்வணிக வழித்தடமாகத் திகழும் இந்தப் பகுதியை சீனா ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், தென் சீனக் கடலை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்புக்கான புதிய முத்தரப்புக் கூட்டணியை அமைத்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த வாரம் அறிவித்தன.
அந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக, அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு முன்னதாக டீசலில் இயங்கக் கூடிய 12 நீா்முழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடமிருந்து வாங்க ஆஸ்திரேலியா கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. தற்போது அமெரிக்காவிடமிருந்து நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்குவதால், 6,600 கோடி டாலா் (சுமாா் ரூ.4.9 லட்சம் கோடி) மதிப்பிலான பழைய ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தங்களது தூதா்களை திரும்ப அழைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆக்கஸ் விவாகரம் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.