அப்படி என்ன பிரச்சனை? இந்தியாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | Apr 04, 2019 10:21 PM
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை ‘வரிவிதிப்பு ராஜா’ வான (இந்தியா) அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்ததற்கான காரணம் என்ன? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரிவிதிக்கிறது. இது அமெரிக்காவுக்கு தடையாக உள்ளது. அதனால் தான் இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்தேன் என்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சர்வதேச அளவில் அதிக வரிவிதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத இறக்குமதி வரி விதித்து பின்னர் 50 சதவீதமாக குறைத்தது, அதை மேலும் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் வரி விதிப்பை விமர்சிக்கும் விதமாக 'இந்தியா வரிவிதிப்பின் ராஜா ' என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.