ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த ஹோம் மேட்ச் டிக்கெட்?.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 04, 2019 09:53 PM

அடுத்து சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் மேட்சுக்கான டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

IPL 2019: Ticket sales start for CSK home match against KKR

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. இப்போட்டியிலும் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதனை  அடுத்து வரும் சனிக்கிழமை(06.04.2019) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 9 -ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 7-ம் தேதி காலை 8.45 மணி முதல் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதே நேரத்தில் இணையதளத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSK #WHISTLEPODUARMY #YELLOVEAGAIN #TICKETS