சித்ரவதை செய்யப்பட்டாரா அபிநந்தன்?.. ரத்தம் வடிய இழுத்துச்செல்லப்படும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 27, 2019 05:52 PM

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 -ம் தேதி துணைநிலை ராணுவப்படை வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 -க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதல் குறித்து இந்தியாவின் பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் பிரபலங்கள் தங்களது கண்டனத்தை பாகிஸ்தானின் மீது வெளிப்படுத்தினர்.

watch video of IAF Pilot Abhi nandan with bleeding on his face

பின்னர் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லைகளில் பதற்றம் நீடித்து வந்தது. இந்நிலையில் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பால்கோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த காஷ்மீரின் போர் நிறுத்த ஒப்பந்த பகுதிகளான  நவ்சேரா-ரஜோர் உள்ளிட்ட 4 பகுதிகளில் , அத்துமீறி குண்டு வீசிய பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த விமானங்கள் பள்ளத்தாக்கில் நொறுங்கி வீழ்ந்ததாகவும், விமானிகள் பாரசூட் மூலம் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளதாக ஏஎன்ஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

பின்னர் இந்திய விமானியும் துணை நிலை ராணுவ அதிகாரியுமான அபிநந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் பாகிஸ்தான் வெளியிட்டிருந்த நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய கமாண்டர் அபிநந்தனை கோரமாக தாக்கும் வீடியோ காட்சிகளும் அதன் பின்னர் வெளியாகின.

இணையத்தை அதிரவைத்த அந்த வீடியோவைத் தொடர்ந்து அபிநந்தன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வீடியோவும் அடுத்து வெளியானது. அதில் அபிநந்தன் ரத்தக்காயத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது இணையத்தில் பரவி இந்தியாவையே அதிரவைத்துள்ளது. இதனால் அபிநந்தன் கொடுமைப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டாரா என்கிற சந்தேகங்கள் பொதுமக்களிடையே பலமாக எழுந்துள்ளன. 

Tags : #PAKISTAN #INDIA #SURGICALSTRIKE2 #INDIANAIRFORCE #IAFPILOT #ABHINANDAN #VIRALVIDEOS