அட என்னா தைரியம்! பேண்ட் பாக்கெட்டிற்குள் மறைத்து மலைப் பாம்பை திருடி சென்ற மனிதர்! வியப்பூட்டும் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | Apr 01, 2019 09:38 PM

 

man stolen the python by keeping in his pant from the pet shop

நம்ம நகை, பணம், கார், பைக் இப்படி எதாவது ஒரு பொருள திருடரவங்கள பார்த்துருபீங்க ஆனா இங்க நடந்த திருட்டு ரொம்பவே வித்யாசமானது.

அமெரிக்காவில் உள்ள செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடையில் பைத்தான் எனப்படும் மலைப்பாம்பை வளர்த்து விற்பனைக்காக வைத்திருந்தனர். அந்த கடைக்கு வந்த ஒருவர் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பாம்பை எடுத்து தனது பேன்டிற்குள் மறைத்து வைத்து திருடி சென்றுள்ளார்.

பாம்பை தனது பேண்டிற்குள்ளேயே வைத்து கடையின் மற்றபகுதிகளுக்கு சென்று கடைக்குள்ளேயே 4 நிமிடம் சுற்றியுள்ளார். ஆனால் பாம்பு அவரை எதுவும் செய்யவில்லை.அதன் பின்பு ஒரு எலியை வாங்கிவிட்டு அதற்கு மட்டும் பில் கட்டிவிட்டு அந்த எலியுடன் சென்றுவிட்டார்.

பின்னர் அந்த பாம்பை காணவில்லை என கடை ஊழியர்கள் தேடிய போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது இந்த நபர் பாம்பை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது வரை பாம்பை திருடி சென்றவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.

மேலும், அந்த பாம்பு அவரை எப்படி கடிக்காமல் இருந்தது எனவும் கடைக்காரர்களுக்கு குழப்பமாக இருக்கிறது. இந்நிலையில், ஒருவர் சுமார் 4.5 அடி நீளம் உள்ள பாம்பை தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் எடுத்து சென்றது பலரை வியப்படையவைத்துள்ளது.

Tags : #THEFT #SNAKE #USA