இந்திய அரசை மிரட்டும் டிரம்ப்! அதிர்ச்சியளிக்கும் காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | Mar 30, 2019 10:44 PM
ரஷ்யா - உக்ரைன் பிரச்னை, அமெரிக்கா அரசியல் உட்பட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-ரஷ்யா இடையே நட்புரவு நிலவுவதால், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் எதிரப்பு தெரிவித்து வருகின்றது.
மேலும், அமெரிக்காவின் பொருளாதார தடை சட்டத்தின் மூலம் எதிரிகளுக்கு பதிலடி என்ற நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த வியாழன் அன்று கையெழுத்திட்டார். இப்போது இந்த பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ரூ.30 கோடியில் எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளதை அறிந்த அமெரிக்கா, எங்கள் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த பிரச்சனை இந்திய அரசாங்கத்துக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.