‘பிரதமர் மோடி சொன்ன மாதிரி'... 'இன்னைக்கு இரவு விளக்கேத்துங்க’... ‘ஆனால், அதுக்கு முன்னாடி இதை செய்யாதீங்க’... ‘வெளியான அறிவுறுத்தல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 05, 2020 12:36 AM

இன்று இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்களுக்கு பதில் ‘சோப்’ பயன்படுத்துங்கள் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

On April 5, wash hands with soap instead of using alcohol-based saniti

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றும் பொழுது, 'வருகிற 5-ந் தேதி இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் ஃபோனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள்' என கூறினார்.

இந்நிலையில் இதுபற்றி இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், 'ஏப்ரல் 5-ந் தேதி (ஞாயிறு) இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன்பு, ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை கொண்டு கைகளை தூய்மைப்படுத்துவதற்கு பதில் ‘சோப்புகளை’ கொண்டு கைகழுவுங்கள் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கைகளை தூய்மைப்படுத்த உதவும் சானிடைசர் திரவத்தில் ஆல்கஹால் சதவீதம் அதிகம் இருக்கும்.  60 சதவீதத்திற்கு மேல் ஆல்கஹால் சேர்க்கப்படும்பொழுது, வைரஸ் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. 

ஆல்கஹால் அளவு அதிகரிக்கும்பொழுது, எளிதில் தீப்பற்ற கூடிய ஆபத்து' உள்ளதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், அரியானாவின் ரேவரி நகரை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் சானிடைசரை தனது ஆடையில் தெளித்துள்ளார்.  அவர் அதனை பயன்படுத்தும்பொழுது, அருகே கேஸ் சிலிண்டர் இருந்து உள்ளது.  திடீரென அவர் மீது தீப்பற்றி கொண்டதில் அந்நபருக்கு 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.  தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் உள்ளார்.