என்ன ஒரு வேகம்! திறக்கப்பட்ட 'பிரபல' தீம் பார்க்... நிமிடங்களில் 'விற்றுத்தீர்ந்த' டிக்கெட்டுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | May 12, 2020 10:48 PM

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அதிகம் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சுமார் 42 லட்சம் பேர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பாத்திக்கப்பட்டுள்ளனர்.

Disney Land opens in China after nearly three months

பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் சில நாடுகள் கொரோனா வைரஸை கட்டிற்குள் கொண்டு வந்ததையொட்டி ஊரடங்கை ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்நிலையில், சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையொட்டி ஷாங்காய் பகுதியிலுள்ள டிஸ்னிலேண்ட் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

எனினும், குறிப்பிட்ட நபர்களை மட்டுமே முனாபதிவு அடிப்படையில் அனுமதிக்கின்றனர். மேலும், அங்கு வரும் மக்களுக்கு உடல்நிலை வெப்பம் சோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அங்கு வரும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல மிக்கி மவுஸ் போன்ற கேரக்டர்களுடன் பேசுவது உட்பட சில முக்கிய நிகழ்ச்சிகளையும் நிர்வாகம் தடை செய்திருந்தது.

தற்போது சீனாவின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் மக்களிடம் அதிக அச்சம் இருந்த போதும் டிஸ்னிலேண்ட் டிக்கெட்டுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளன. இதுகுறித்து அங்கு முதல் நாள் டிஸ்னிலேண்ட் வந்த சிலர் கூறுகையில், 'ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருந்த எங்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. அதனால் தான் டிஸ்னிலேண்ட் தீர்க்கப்படவுள்ள தகவல் அறிந்ததும் வேகமாக முன்பதிவு செய்து கொண்டோம். இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம்' என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சீனாவில் ஊரடங்கின் காரணமாக, கடந்த மூன்று மாதத்தில் டிஸ்னி நிர்வாகத்திற்கு லாபத்தில் சுமார் 91 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.