அட்டகாசம் செய்த சீன ராணுவம்!.. அடக்கிய இளம் இந்திய வீரர்!.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது?.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | May 12, 2020 08:17 PM

சிக்கிம் உங்கள் ஊர் இல்லை எனக் கூறிய சீன ராணுவ அதிகாரியின் மூக்கை இந்திய ராணுவ வீரர் உடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

what happened in sikkim between indian and china troops

இந்தியா-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த வாரம் நடைபெற்ற மோதலின் போது சிக்கிம் உங்கள் ஊர் இல்லை என கூறிய சீன ராணுவ அதிகாரியின் மூக்கை இளம் இந்திய ராணுவ வீரர் உடைத்ததாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இளம் இந்திய ராணுவ வீரர் தனது சக வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன்  நாகு லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அங்கு தங்கள் நாட்டு வீரர்களுடன் வந்த ஒரு சீன ராணுவ அதிகாரி ''இது (சிக்கிம்) ஒன்றும் உங்கள் நிலப்பரப்பு அல்ல, இது ஒன்றும் இந்திய எல்லை அல்ல... ஆகையால் உடனடியாக வெளியேறுங்கள்" என சத்தமாக கூறினார். மேலும், இந்திய ராணுவ உயர் அதிகாரியை நோக்கி மிரட்டும் விதமாக வேகமாக நடந்து வந்தார்.

அப்போது இந்திய அதிகாரியுடன் பணியில் இருந்த இளம் ராணுவ வீரர் ஒருவர், ''என்ன... சிக்கிம் எங்கள் நிலம் கிடையாதா?"  என சத்தமாக கூறினார்.

மேலும், இந்திய அதிகாரியை நோக்கி வேகமாக நடந்து வந்த சீன ராணுவ அதிகாரியை இடைமறிந்த அந்த வீரர் அவரின் முகத்தில் வேகமாக குத்தினார். இதில் சீன அதிகாரியின் மூக்கு உடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட கீழே சரிந்து விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக இந்திய வீரர்கள் அந்த இளம் வீரரை கட்டுப்படுத்தினர். மேலும், உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். இதனால், அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.