கொரோனா 'மையமான' வுஹானில் 'மீண்டும்' பாதிப்பு... '10 நாட்களில்' செய்து முடிக்க... 'அதிரடி' திட்டத்தை கையிலெடுத்துள்ள 'சீன' அரசு...
முகப்பு > செய்திகள் > உலகம்வுஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சீன அரசு அதிரடி திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுஹான் நகரில்தான் முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. பின்னர் எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளின் பலனாக கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் அங்கு புதிதாக யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதையடுத்து அங்கு ஊரடங்கு கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் வுஹானிலுள்ள குடியிருப்பு ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு அறிகுறி இன்றி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுஹான் நகரிலுள்ள 11 மில்லியன் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பரிசோதனைகளை 10 நாட்களில் செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Tags : #CORONAVIRUS #COVID-19 #CHINA #WUHAN #TEST