'உலகம் முழுவதும் கொரோனா பீதியில்...' 'எல்லைப்' பிரச்னையை கையிலெடுக்கும் 'சீனா'... ஏதோ 'திட்டத்துடன்' செயல்படுவதாக 'ஆய்வாளர்கள் கருத்து...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 11, 2020 07:35 PM

எவரெஸ்ட் மீண்டும் தங்களது எல்லைக்குள் இருக்கிறது என்பது போன்ற மாயை உருவாக்கி, சீனா ட்வீட் ஒன்று பதிவு செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Everest belongs to us - China once again disputed

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சைனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தது. அந்தப் பதிவில், ''சூரியனின் ஒளிவட்டம் குமொலங்மாவில் தெரிகிறது'' என்று பதிவிட்டு இருந்தது. குமொலங்மா என்று சீனா குறிப்பிடுவது எவரெஸ்ட்டைத்தான். எவரெஸ்ட்டின் பெரும்பகுதி சீனா ஆக்கிரமித்து வைத்து இருக்கும் திபெத்தில்தான் இருக்கிறது.

1960ஆம் ஆண்டில் சீனாவுக்கும், நேபாளத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, எவரெஸ்ட் இரண்டாக பிரிக்கப்பட்டது. தெற்குப் பகுதி நேபாளத்துக்கும், வடக்குப் பகுதி திபெத்துக்கும் ஒதுக்கப்படும் என்று கையெழுத்தானது. திபெத் தற்போது சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் எவரெஸ்ட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தொடர்ந்து போராடி வருகிறார்.

திபெத்தின் பக்கம் இருக்கும் எவரெஸ்ட் பகுதியை சீனர்கள் மிகவும் குறைவாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு வருபவர்களுக்கு விசா கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதனிடையே எவரெஸ்ட்டில் 5G நெட்வொர்க்கை சீனா அமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியா, வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளின் ராணுவ தளங்களை சீனா கண்காணிக்கும் சூழல் ஏற்படும். தற்போது இருக்கும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, சீனாவும் ஏதோ திட்டத்தை கருத்தில் கொண்டே செயல்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.