'அதிர்ஷ்டம்' ஆன்லைன்லயும் வரலாம்.. வெறும் '90 ரூபாய்'க்கு வாங்குன குவளை.. எத்தனை 'கோடிக்கு' ஏலம் போயிருக்கு பாருங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Nov 11, 2019 01:09 PM

அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதை மீண்டும் ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது.

Shopper bought Chinese vase Rs 90 sold 4.42 crores

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் ரூபாய் 90-க்கு பழமையான ஒரு குவளையை வாங்கி இருக்கிறார். இந்த குவளை தொடர்பான புகைப்படங்கள் எப்படியோ இணையத்தில் பரவ அதை வாங்க பலரும் போட்டிபோட்டு உள்ளனர். அதற்கு பின்தான் இந்த குவளை சீனாவைக் கடந்த 1735 முதல் 1796 வரை ஆட்சி செய்த குயன்லாங் என்ற மன்னர் பயன்படுத்திய குவளை என்பது தெரியவந்தது.

இதற்கு பின் அவர் அதே குவளையை ஆன்லைன் வழியாக ஏலத்தில் விட்டார். பலரும் இந்த குவளையை வாங்க பலத்த போட்டி போட்டனர். கடைசியில் ரூபாய் 4.42 கோடிகள் கொட்டிக்கொடுத்து இந்த குவளையை ஒருவர் வாங்கி இருக்கிறார். இதன் வழியாக அவர் ஒரே நாளில் கோடீஸ்வரி ஆகிவிட்டார். தற்போது இந்த பணத்தை தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்கு செலவு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #CHINA