'நம்ம பீச்'...'நாமதான் பாத்துக்கணும்'...'வாக்கிங்' போற நேரத்துல மாஸ் காட்டிய பிரதமர்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 12, 2019 10:35 AM

நடைபயிற்சி மேற்கொண்ட நேரத்தில் மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் துப்புரவு பணியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

PM Modi plogs at Mamallapuram beach video goes viral

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று கோவளம் வருகை தரும் நிலையில், பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியுள்ளார். இரு தலைவர்களும் இன்று சந்தித்து கொள்ளும் நிலையில், பிரதமர் மோடி காலை கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

சுமார் அரை மணி நேரம் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் அள்ளிய குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். பின்னர் இதுகுறித்து ட்வீட் செய்த மோடி, பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க அனைவரும் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள அனைவரும் முயற்சி செய்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #NARENDRAMODI #TWITTER #MAHABALIPURAM #CHINESE PRESIDENT #CHINA #PM MODI #XI JINPING #PLOGS #MAMALLAPURAM BEACH