'சீனாவா...! அய்யோ வேண்டாம்....' 'ஆப்பிள் கம்பெனியோட அடுத்த ப்ளான்...' இந்தியாவிற்கு அடிக்க போகும் ஜாக்பாட்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியின் ஒரு பங்கை இந்தியாவில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவங்களின் உற்பத்தி வீதமும், விற்பனை வீதமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதில் உலகம் முழுவதும் மிக பெரிய சந்தையை கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனமும் அடங்கும். சமீபத்தில் அதன் புதிய வெளியிட்டு திட்டத்தையும் கொரோனா பரவலால் தள்ளி வைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை சீனாவில் தயாரித்து வருகிறது. தற்போது இருக்கும் சூழலுக்கு முழுக்காரணம் சீனா என்பதால், உற்பத்தி வீதம் வெகுவாக அடிபட்டுள்ளதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி, தங்களின் உற்பத்தியை வேறொரு நாட்டிற்கு திருப்ப ஆர்வம் காட்டி உள்ளது. இதனால் இந்தியாவிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது எனலாம்.
ஆப்பிளும் தனது ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளுக்கும், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த பேச்சின் விளைவாக, ஆப்பிள் நிறுவனம், சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது.
ஆப்பிள் ஐபோனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களை பயன்படுத்தி, இந்தியாவில் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய, ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, இந்திய அரசு அறிவித்துள்ள மத்திய அரசின் சில சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.
உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை நிலையங்களையும் திறக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு நேரிடையான ஷோரூம்கள், இந்தியாவில் இல்லை. ஆப்பிள் தனது உற்பத்தியை இந்தியாவில் தொடங்கினால் 2021ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆப்பிளின் முதல் ஷோரூம் திறக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
