'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவை பொறுத்த வரை கொரோனாவின் பாதிப்பு ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தற்போது கூறியுள்ளார்.
இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டதால் தற்போது நோய் பரவல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கடுமையான பொது முடக்கம் காரணமாக வைரஸ் பரவல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கப்பட்டு விட்டதாகவும், மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் சில நகரங்களில்தான் நோய் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பட்டார்.
பொது முடக்கத்தை நீக்கிவிட்டால் நோய் பரவல் தன்மை வெடிப்பாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் இந்தியாவில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் நோய் பரவுதல் வேகமாக இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் நோய் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
