இந்திய-சீன எல்லையில் பரபரப்பு!.. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய-சீனா எல்லையான சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய-சீனா எல்லையான சிக்கிம் பகுதியின் வடக்குப் பகுதியில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் இருநாட்டு வீரர்களும் லேசான காயமடைந்துள்ளனர். மோதல் ஏற்பட்ட போது சுமார் 150 வீரர்கள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
இந்த மோதலில் 4 இந்திய வீரர்களுக்கும், 7 சீன வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய சீன எல்லையான சிக்கிம் பகுதியில் எல்லைப் பிரச்னை நிலவுவதால் இது போன்ற மோதல்கள் அவ்வப்போது நடக்கும் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருநாட்டு வீரர்களும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
