‘இந்தியாவில் 70 ஆயிரத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பில், 3 மாநிலங்களில் உச்சம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 12, 2020 11:22 AM

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

The number of confirmed cases of corona in India has crossed 70,000

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 70,756  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3604 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2293 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 23,401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் இதுவரை 8,541 பேருக்கும், தமிழகத்தில் 8,002 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.