'25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் வாழ் உயிரினத்தின் புதைபடிமங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் கார்ட்டோரிங்கஸ் குடும்பத்தைச் சேர்ந்த கடல் வாழ் உயிரினத்தின் படிமம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தட்டையான நீண்ட வாலுடன் முதுகில் துடுப்புடன் காணப்படும் இந்த வகை உயிரினம் நீளமான வாயும், அதில் ஏராளமான கோரைப் பற்களையும் கொண்டிருந்ததது தெரியவந்துள்ளது. இந்த உயிரினம் அதிகபட்சம் 30 அடி நீளம் வரை வளர்ந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினம் ஒன்றரை அடி நீளமுள்ள மீன் போன்ற உயிரினத்தின் கற்படிமம் ஆகும்.
Tags : #CHINA #FOSSIL #25 BILLION YEARS #DISCOVER
