வீடியோ:'மனித' முகத்துடன் பிறந்த 'பன்றிக் குட்டி'... 'குழந்தையை' போலவே 'தலைமுடி'... 'இணையத்தில்' வைரலாகும் 'வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 14, 2020 07:50 PM

வெனிசூலாவில் மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pig born with human like face and hair-Viral Video

வெனிசுலா நாட்டில், லாரா மாகாணத்தில் உள்ள கியூபிராடா அரிபா என்ற நகரில் விவசாயி ஒருவர் பன்றிப் பண்ணை நடத்தி வருகிறார். இதில் உள்ள பன்றி ஒன்று சமீபத்தில் குட்டியை ஈன்றது. இந்த பன்றிக் குட்டி தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

அதற்குக் காரணம் அந்தப் பன்றிக் குட்டியின் முகம் பார்ப்பதற்கு அப்படியே மனித முகத்தை போலவே இருப்பதுதான். ஒரு குழந்தையின் முகத்தைப் போலவே அந்த பன்றிக் குட்டி தெரிவதால் பார்ப்பவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் அந்த பன்றிக் குட்டிக்கு மனிதர்களைபே போலவே தலையில் முடியும் வளர்ந்துள்ளது.

வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த பன்றிக்குட்டியை அந்த விவசாயி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VENEZUELA #PIG #BORN #HUMAN FACE #HUMAN HAIR #VIRAL VIDEO