ஒரே 'ட்வீட்டில்' உலகம் முழுவதும் 'வைரலான பெண்'... '10 மில்லியன்' பார்வையாளர்கள்... '94.4K ரீ ட்விட்' ... "அப்படி என்ன அந்த வீடியோவில் உள்ளது?..."

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 03, 2020 10:58 AM

புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேட்டி என்ற பெண் தனது  இறுதி  சிகிச்சைக்கு முன்னர் பதிவிட்ட உருக்கமான ட்விட்டர் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. வெறும் 12 ஃபாலோயர்களை மட்டுமே கொண்டிருந்த கேட்டியை தற்போது 32 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.

A Tweet posted by a Cancer affected woman has gone viral

மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்ட கேட்டி ஹேலண்ட் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்துள்ளார். வலி மிகுந்த இந்த சிகிச்சை முறையின் இரு கட்டத்தை கேட்டி ஹேலண்ட் எட்டியுள்ளார்.

இதனிடையே கேட்டி தான் இறுதி கட்ட சிகிச்சையை மேற்கொள்ளும் முன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோவை ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவில் "என்னை ட்விட்டரில் 12 நபர்கள் மட்டுமே பின் தொடர்கின்றனர் .அந்த 12 பேருக்கும் கூறுகிறேன். இன்று தான் எனது புற்றுநோயின் இறுதி கட்ட கீமோதெரபி சிகிச்சை" என பதிவிட்டு தான் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

 

இந்நிலையில் சிகிச்சை முடிந்து குணமடைந்து தனது வீட்டிற்கு வந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தை திறந்து பார்த்துள்ளார். அதில் தன்னுடைய பதிவு உலகம் முழுமையும் வைரலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கடைசியாக ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் கடந்தது. 94.4K ரீ ட்விட் மற்றும் 957.1K லைக்ஸ் வாங்கி உலகம் முழுமையும் வைரலாகி இருந்ததை கண்டு ஆச்சர்யத்தில் திகைத்து போனார்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தன் மேல் கொண்டிருந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன கேட்டி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 12 பேர் மட்டுமே பின் தொடர்ந்த கேட்டியின் ட்விட்டர் கணக்கை தற்போது 32 ஆயிரம் பேர் தொடர்கின்றனர்.

Tags : #TWITTER #VIRAL VIDEO #CANCER #KATYHELEND