எல்லோரும் 'சீரியசா' மேட்ச் 'விளையாடிட்டு' இருக்கும் போது... 'ஒருத்தன்' மட்டும் 'டிக்டாக்' பண்ணி பெரிய ஆளாகப் பார்த்தான்... 'யார் தெரியுமா...?' 'வைரல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் செய்த டிக்டாக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். டிக்டாக், ட்விட்டர் போன்றவற்றில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். அவரது வீடியோக்களுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது அவர் பதிவிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Off field performance on point 🕺 pic.twitter.com/2LRswnVWNs
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 1, 2020
"Off field performance on point" என பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் அவருடன் சேர்ந்து 3 பேர் இந்த டிக்டாக் வீடியோவில் பங்கேற்றுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆமா..ரோஹித் சர்மா எதுக்கு முகத்தை மறைத்திருக்கின்றார் என பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
