வீடியோ : 'பாகிஸ்தான்' நிலைகளை அடித்து நொறுக்கிய இந்திய 'ராணுவம்'... 'பாலகோட்டுக்கு' பிறகு மீண்டும் ஒரு 'அதிரடித்' தாக்கதல்... 'சமூக' வலைதளங்களில் 'வைரலாக' பரவும் 'வீடியோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 06, 2020 11:12 AM

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதற்கு பதிலடி தரும் விதமாக, அந்நாட்டின் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் சமீபத்தில் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pakistani terror launch pads demolished by Indian Army

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா செக்டாருக்கு எதிரே உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது கடந்த மாதம் 3-ஆவது வாரத்தில் இந்திய ராணுவம் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தியது.  பாகிஸ்தானில் உள்ள நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் முயற்சித்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் குண்டுகள் சீறிப் பாய்ந்து இலக்குகளை தாக்கி அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குண்டுகளால் தாக்கப்பட்ட பகுதிகளில் வெடித்து சிதறி புகை மண்டலமாக மாறும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் பலியாகினர், சேதவிவரம் உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை...

Tags : #INDIAN ARMY #PAKISTAN #LAUNCHPAD #DEMOLISHED #VIRAL VIDEO