'ஃபாஸ்ட் புட்' கடையில வேலை பார்த்தவரு போல... தீயாய் பரவும் 'நெருப்பு கட்டிங்' வீடியோ... 'சிக்கன் ரைஸ்' போடுற மாதிரியே ஒரு எபஃட்டு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 28, 2020 10:47 AM

கேஸ் அடுப்பில் நெருப்பை பற்ற வைப்பது போல், ஒருவர் தலையில் தலையில் நெருப்பினை பற்ற வைத்து முடிதிருத்தும் சிகை அலங்காரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Barber hairstyle with fire on the head-viral video

தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் காலமெல்லாம் தற்போது மலையேறிப் போய் விட்டது. ஆண்கள், சிகையலங்காரம் செய்து கொள்வதில் தற்போது விதவிதமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கென ஸ்பைக், பாக்ஸ் கட்டிங், வி கட்டிங் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகை அலங்காரங்கள் வந்து விட்டன. பெரும்பாலும் தற்போதைய இளைஞர்கள் தங்கள் தலைமுடியை வித்யாசமாக வைத்துக் கொள்வதிலேயே ஆர்வமிகுதியாய் உள்ளனர்.

ஒரு காலத்தில் சிகையலங்காரம் செய்து கொள்வதற்கு கத்தரி கோல் மட்டுமே பயன்படுத்தினர். அதன் பின்னர் ட்ரிம்மர் இயந்திரத்தை பயன்படுத்தினர். ஆனால் தற்போத கொஞ்சம் கூடமனசாட்சியே இல்லாமல் தலையில் தீயை வைத்து முடியை பொசுக்கி சிகையலங்காரம் செய்து கொள்ளும் புதிய பழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது என்னடா வித்தியாசமாக இருக்கிறது என கேட்பவர்கள் கீழே உள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

ஜோஷ் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் தலையில் முடி வெட்டும் நபர் ஜெல் ஒன்றை அப்லை செய்து அவரது தலையில் தீயை பற்ற வைக்கின்றார்.

பற்றி எரியும் அவரது தலைமுடியில் முடி திருத்துபவர் ஒரு ஹேர்ஸ்டைல் ஒன்றை உருவாக்குகிறார்.  முடியை திருத்துபவர் தலையில் தீயை பற்ற வைத்து விட்டு சற்று தும்மல் வருகிறது என்று நேரம் எடுத்துக் கொண்டாலும் சரி, அமர்ந்திருப்பவரின் கதி அதோ கதிதான்.

Tags : #BARBER #HAIRSTYLE #FIRE ON HEAD #VIRAL VIDEO