'அறிவித்தது அறிவித்தது தான்'.... பள்ளிக்குழந்தைகள் 'விடுமுறை' குறித்து 'முதலமைச்சர்' வெளியிட்ட புதிய 'அப்டேட்'....

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 14, 2020 07:18 PM

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மார்ச்.31ம் தேதி வரை விடுமுறை என அறிவித்தது அப்படியே நடைமுறைப்படுத்தப்படும் என முலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tn C.M. edappadi palanisamy confirmed LKG-UKG students leave

இந்தியாவில் கொரேனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை அடுத்து தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உச்சக்கட்ட அவரச நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர், மால்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி- கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு வருகின்றன. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டன.

இதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் கொரோனா தொற்று இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மார்ச். 16 முதல் வரும் மார்ச். 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

மேலும், தமிழகத்தில் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி முதல் 5 வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த உத்தரவை நிறுத்தி வைக்க போவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மழலையர் பள்ளிகளுக்கு அறிவித்த விடுமுறை அப்படியே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், "கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 16 முதல் 31-ம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது இன்று திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வரும் திங்கள் கிழமை முதல் குழந்தைகளுக்கு அறிவித்த விடுமுறை பள்ளிக்கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது." எனக் குறிப்பிட்டார்.

Tags : #TAMILNADU #SCHOOLS #LEAVE #CONFIRM #EDAPPADI PALANICHAMY #ANNOUNCED