'அசுர வேகத்தில் வந்த எஸ்யுவி'... 'டிவைடரை தாண்டி பல்டி'... உதறல் எடுக்க வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 13, 2019 03:19 PM
அசுர வேகத்தில் வந்த கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் ஷமீர்பெட் பகுதியில் எஸ்யுவி கார் ஒன்று அதிவேகமாக வந்தது. ஒரு கட்டத்தில் வேகமாக வந்த அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதியது. கார் மோதிய வேகத்தில் சாலையின் எதிர்புறம் வந்துக் கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். அத்துடன் இந்தக் காரில் பயணம் செய்த 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த கோர விபத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ''விபத்தை ஏற்படுத்திய எஸ்யுவி வாகனம் ஹைதராபாத்திலிருந்து கரீம் நகரை நோக்கி சென்றுள்ளது. அப்போது இந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உட்பட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CCTV footage of the car crash at Shamirpet, #Hyderabad #Accident #carcrash pic.twitter.com/cBcFLSKOZm
— Sushil Rao (@sushilrTOI) August 12, 2019
