அடுக்குமாடி கட்டிடம் இடிந்து கோரவிபத்து..! 2 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 16, 2019 03:12 PM

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Four storey building has collapsed in Mumbai

மும்பை டோங்கிரி என்ற பகுதியில் உள்ள தண்டேல் தெருவில் 4 மாடி கட்டிடம் இன்று பிற்பகல் பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மும்பையில் பெய்த தொடர் மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Tags : #MUMBAI #BUILDING #COLLAPSED #DEAD