படங்களில் வருவது போல் 'நிஜமாகவே வந்த பறக்கும் மனிதன்'.. 'வாயடைத்துப் போய்' ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Siva Sankar | Jul 29, 2019 11:04 AM
திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களைப் போலவே, சிறிய வாகனத்தை வடிவமைத்து வருகிறார் பிராங்கி ஸபாட்டா.
பொதுவாகவே சூப்பர் ஹீரோக்கள் பறக்கும் மனிதர்களாகவே திரைப்படங்களில் வலம் வருகின்றனர். இதேபோல், பறக்கும் பலகை மெஷின் ஒன்றை ஸபாட்டா எரிபொருள் நிரப்பி பறக்குமாறு வடிவமைத்திருந்தார். எனினும் பிரான்சின் போட்டி ஒன்றில் பங்கேற்று, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்தில் தரையிறங்க முயன்றார்.
ஆனால் 20 நிமிட பயண தூரத்தில் பாதி தூரத்தைத் தாண்டி சென்றுகொண்டிருந்ததாகவும், ஆனால் அதற்குள் எரிபொருள் தீர்ந்துவிட்டது தன்னை ஆத்திரப் படுத்தியதாகவும், அடுத்தடுத்து சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்றும் சிரித்துக்கொண்டே ஜாலியாக பேட்டி அளித்துள்ளார்.
இந்த ஃபிளைபோர்டு மணிக்கு 150 கி.மீ வேகத்திலும், 10 நிமிடத்துக்கு 10 ஆயிரம் அடி உயரத்திலும் பறக்கும் இந்த ஃபிளைபோர்டு ஜெட் டர்பைன் இன்ஜின் மூலம் இயங்குவதாகவும், இதற்கு எரிபொருளாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இதனை முதுகில் சுமந்துகொண்டும், கால்களை ஃபிளைங் போர்டில்வைத்தபடியும் பயன்படுத்த வேண்டும்.