கரை ஒதுங்கிய 'விநோத' உயிரினம்... "இப்படி ஒரு உயிரினத்தை கண்டதே இல்லை..." 'ஆச்சரியம்' அடைந்த உயிரியல் 'விஞ்ஞானிகள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 25, 2020 06:45 AM

மெக்சிகோ கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய வினோத உயிரினம் ஒன்றுக்கு கண்கள் இல்லாததைக் கண்டு உயிரியல் விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். டால்பின் தலை போன்ற அமைப்புடைய இந்த உயிரிணத்துக்கு கண்கள் இல்லாமல் வினோதமாகக்  காணப்பட்டது.

A strange creature without eyes in Mexico left the shore

மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ள புவேர்ட்டோ வல்லார்டா என்ற அழகிய கடற்கரை நகருக்கு பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தருவது உண்டு.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள டெஸ்டிலாடெரஸ் கடற்கரையில் கண்கள் இல்லாத வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியதைக் கண்ட சுற்றுலாப்பயணிகள் வியப்பபடைந்தனர். கொடிய பற்களுடன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்த இதுபோன்ற உயிரினத்தை இதுவரை கண்டதில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கடல் மற்றும் வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அந்த உயிரினம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

பசிபிக் கடலின் சூரிய ஒளி புகமுடியாத மிக ஆழமான பகுதியிலிருந்து அந்த உயிரினம் வந்திருக்கலாம் என அவர்கள்  தெரிவித்தனர்.  அத்தையக ஆழத்தில், முழுவதும் இருளாக இருக்கும் பட்சத்தில் அந்த உயிரினத்துக்கு கண்கள் தேவைப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.

Tags : #MEXICO #STRANGE CREATURE #WITHOUT EYES #LEFT THE SHORE