'அதிர்ஷ்டம்' எப்புடி வேணா வரலாம்.. ஒரே நாள்ல.. 'லட்சாதிபதியா' மாறுன மீனவர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 04, 2019 12:36 PM
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே மீனால் லட்சாதிபதியாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
![Odisha Fisherman catch rare Marine fish worth Rs.2 lakh Odisha Fisherman catch rare Marine fish worth Rs.2 lakh](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/odisha-fisherman-catch-rare-marine-fish-worth-rs2-lakh.jpg)
ஒடிசா மாநிலம் ராஜ்நகர் பகுதிக்குட்பட்ட தல்சுவா என்ற பகுதியில் வசித்து வரும் மீனவர் ஒருவர் சில நாட்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, அரியவகை மீனான மயூரா என்ற மீன் அவருக்கு கிடைத்துள்ளது.
மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடிய இந்த மீன் மீனவர்களுக்கு கிடைப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். 15 முதல் 30 கிலோ வரை எடைகொண்ட இந்த மீன் கிலோ ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகுமாம்.
இந்த மீனை தொழிலதிபர் ஒருவர் ரூபாய் 2 லட்சம் கொடுத்து வாங்கி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே நாளில் அந்த மீனவர் லட்சாதிபதியாக மாறியிருக்கிறார்.
Tags : #MONEY
![](https://www.behindwoods.com/images/spacer.gif)