‘50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில்’.. ‘டிரம்ப்பின் கைப்பிடித்து’.. ‘ஹௌடி மோடி’யில் நடந்த சிறப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 23, 2019 06:19 PM

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஹூஸ்டனில் 50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

PM Narendra Modi said everything is fine in India

அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹௌடி மோடி’ என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பிரமர் மோடி கலந்து கொண்டார். டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘எப்படி இருக்கிறீர்கள்.?’ என்றால் ‘ஹௌடி’ என ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம். அதனால் இந்த விழாவை ஏற்பாடு செய்த இந்தியர்கள் ‘மோடி சௌக்கியமா.?’ என பெயர் வைத்தனர்.

சுமார் 50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில் பேசிய மோடி ‘இந்தியர்கள் அனைவரும் சௌக்கியாமாக இருக்கிறோம்’ என பல இந்திய மொழிகளில் பேசினார். அதில் ‘எல்லாம் சௌக்கியம்’ தமிழிலும் தெரிவித்து அசத்தினார். முன்னதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ‘என் இந்திய குடும்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ என கூறினார்.

Tags : #NARENDRAMODI #DONALDTRUMP #HOWDYMODI #AMERICA