சகோதரி கனவுல வந்த 5 எண்கள்.. அடுத்த கொஞ்ச நாளுல.. "அவங்க வாழ்க்கையே மாறிடுச்சு".. கூரை மேல் கொட்டிய அதிர்ஷ்டம்
முகப்பு > செய்திகள் > உலகம்கனவில் வந்த எண் காரணமாக, பெண் ஒருவரின் வாழ்க்கையே மாறிய சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | மொத்தமா 42 அடிக்கு 'நகம்'.. "பின்னாடி இருக்குற உருக்கமான சபதம்.." கின்னஸ் சாதனை படைச்சும் கண் கலங்கும் பெண்
ஒருவரது வாழ்வில் எப்போது எந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வழியில் இருந்து அவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும்.
அந்த வகையில், Maryland என்னும் பகுதியை சேர்ந்த 68 வயது பெண் ஒருவருக்கு, அசத்தலான அதிர்ஷ்டம் ஒன்று கனவு மூலம் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, 68 வயதாகும் அந்த பெண்மணியின் சகோதரி ஒருவர், தனது கனவில், 23815 என்ற எண் கொண்ட பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும், 68 வயது பெண்ணுக்கு ஏதோ பொறி தட்ட, உடனடியாக அதே எண்களில், லாட்டரி டிக்கெட் வாங்கவும் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதன்படி, 23815 என்ற எண்கள் கொண்ட லாட்டரி சீட்டு ஒன்றை அவரும் வாங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், லாட்டரி குலுக்கலின்போது, தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு கடும் அதிர்ஷ்டம் ஒன்றை அடித்ததை பார்த்து மிரண்டு போனார்.
சகோதரியின் கனவில் வந்த எண்களைக் கொண்டு, லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணிற்கு, 25,000 டாலர்கள் பரிசாக அடித்துள்ளது. இந்திய மதிப்பில், சுமார் 19 லட்சம் ரூபாய் ஆகும். இதனை அறிந்ததும் அந்த பெண், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். மேலும், தனக்கு கிடைத்த பரிசு தொகை கொண்டு, தன்னை சுற்றியுள்ள கடன்களை அந்த பெண் சரி செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கனவில் வந்த எண்களால், பெண் ஒருவர் 25,000 டாலர்கள் வென்றுள்ள செய்தி, பலரையும் மிரண்டு போக செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, வர்ஜீனியா பகுதியை சேர்ந்த ஒரு நபர், கனவில் வந்த எண்களை கொண்டு, 250,000 டாலர்கள் வரை பரிசாக வென்ற தகவலும் பலர் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
