"அட, இப்படியும் ஒரு மனுஷனா??.." நர்ஸ் எடுத்த லாட்டரிக்கு 75 லட்சம் பரிசு.. "ஆனா, அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கெடச்ச கதை தான் அல்டிமேட்!!"
முகப்பு > செய்திகள் > இந்தியாஒருவரின் வாழ்வில் எப்போது அதிர்ஷ்டம் வரும் என்று நிச்சயம் தெரியாது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வழியில் கூட ஒருவருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.

அந்த வகையில், லாட்டரி டிக்கெட் மூலம், ஒருவரின் வாழ்க்கை மாறியது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சமீபத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவர், 45 லட்சம் ரூபாய் கடன் காரணமாக, தனது வீட்டை விற்க விரும்பிய நிலையில், சரியாக இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக, அவர் வாங்கிய லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது, பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
அந்த வகையில், தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கும், சுமார் 75 ரூபாய் லாட்டரி பரிசு அளித்துள்ள நிலையில், அதன் பின்னால் உள்ள கதை தான் பலருக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், தொடுபுழாவை அடுத்த குமரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றில் சந்தியாமோள் என்பவர் ஹெல்த் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, மூப்பில்கடவு என்னும் பகுதியில் அமைந்துள்ள லாட்டரி கடை ஒன்றில் சில்லரை வாங்கச் சென்றுள்ளார்.
அதுவரை லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் இல்லாத சந்தியா மோள், அதன் பின்னர் சில்லறை வாங்கிய சாஜன் என்பவரின் லாட்டரி கடையில் இருந்து எப்போதாவது லாட்டரி சீட் வாங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, அவர் சாஜனுக்கு தொலைபேசி மூலம் அழைத்து, தனக்கு ஒரு லாட்டரி சீட்டை ஒதுக்கி வைக்குமாறும் கூறுவார். பின்னர், அதற்கான பணத்தையும் சாஜனுக்கு அவர் வழங்கி வருவதை வழக்கமாகக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி இருக்கும் நிலையில், சமீபத்தில் அடித்த லாட்டரி குலுக்கலில், சந்தியா மோளுக்காக சாஜன் மாற்றி வைத்த லாட்டரி டிக்கெட்டிற்கு 75 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது. சந்தியா வாங்கிய லாட்டரி டிக்கெட் எது என்பதே அவருக்கு தெரியாத நிலையில், அந்த கடையை நடத்தி வரும் சாஜன், லாட்டரி டிக்கெட்டை மாற்றி வைத்து விட்டு ஏமாற்றவும் செய்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி எதுவும் செய்யாமல் நேர்மையாக சந்தியாவுக்கு அழைத்து உங்களுக்காக மாற்றி வைத்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ள தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன சந்தியாமோள், அவருக்கு தனது லாட்டரி டிக்கெட்டின் எண் கூட என்னவென்று தெரியாது என கூறி உள்ளார். அப்படி இருந்தும் அவரை ஏமாற்றாமல், அவருக்காக ஒதுக்கி வைத்த லாட்டரி டிக்கெட்டிற்கு பரிசு விழுந்ததை தெரிவித்த சாஜனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | "பள்ளி மாணவிகளுக்கு என்னங்க ஆச்சு??.." கும்பலாக கதறிய மாணவிகள்.. இந்தியாவை பீதியில் உறைய வைத்த சம்பவம்..

மற்ற செய்திகள்
