விமானத்துல ஜன்னல் வழியா பயணி பார்த்த காட்சி.. நடு பாலைவனத்துல இது எப்படி வந்துச்சு..?.. புவியியலாளர்கள் சொல்லிய மிரளவைக்கும் உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட செய்திருக்கிறது. இந்த புகைப்படம் வைரலாக பரவவே, அதுகுறித்த உண்மைகளை வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
பிரம்மாண்ட பள்ளம்
அமெரிக்காவை சேர்ந்த ஜினா என்னும் பெண்மணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்திருக்கிறார். அப்போது விமானத்தின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் கொஞ்ச நேரத்தில் பரப்பாகி உள்ளார். அதற்கு காரணம் அவர் கண்ட காட்சி தான். மேற்கு அமெரிக்காவின் மேலே விமானம் பறந்துகொண்டிருந்த போது, தரையில் பிரம்மாண்ட பள்ளம் ஒன்றை பார்த்திருக்கிறார் ஜினா. இதுகுறித்து அவர் பேசுகையில்,"மேற்கு அமெரிக்காவின் நடுப்பகுதியில் எனது விமான இருக்கையில் இருந்து ஒரு விண்கல் பள்ளத்தை பார்த்தேன். அது செவ்வாய் கிரகத்தின் க்ளோஸ் அப் காட்சிகள் போன்று இருந்தது. அதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுபற்றி பேசிய அவர்," நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடையும் வரையில் இந்த பள்ளத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே, இதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிவெடுத்தேன்" என்றார்.
விண்கல்
இதனை தொடர்ந்து இந்த பள்ளத்தினை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுளளார் ஜினா. கொஞ்ச நேரத்தில் இந்த புகைப்படம் வைரலாக பரவியிருக்கிறது. இது நெட்டிசன்களிடையே பரபரப்பாக பேசப்பட்டாலும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் மோதிய விண்கல் ஏற்படுத்திய பள்ளம் தான் என்கிறார்கள் புவியியலாளர்கள்.
550 அடி ஆழம் மற்றும் கிட்டத்தட்ட ஒரு மைல் அகலம் கொண்ட இந்த பிரம்மாண்ட பள்ளம், அமெரிக்காவின் கிராண்ட் கேனியனுக்கு அருகில் அமைந்துள்ளது. இதனை பொதுவெளிக்கு கொண்டுவர பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இந்த பள்ளம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இருப்பினும் இங்கே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் விழுந்த விண்கல் 300,000 டன் எடையும், மணிக்கு 26,000 மைல் (வினாடிக்கு 12 கிலோமீட்டர்) வேகத்தில் பயணித்திருக்கலாம் என கணித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த விண்கல் ஹிரோஷிமா வெடிகுண்டை விட 150 மடங்கு வெடிப்பை உருவாக்கியதாக கூறும் ஆய்வாளர்கள், விண்கல் பெரும்பாலும் ஆவியாகி மிகச்சிறிய அளவிலான கற்கள் மட்டுமே பள்ளத்தில் தங்கியதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த பள்ளத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.