"ஆத்தாடி, மொத்தமா ரூ.1593 கோடிக்கும் மேல.." பரிசு வென்ற நபரை தேடும் நிறுவனம்.. "பின்னாடி இவ்ளோ சுவாரஸ்யம் இருக்கா??"
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரியில் சுமார் 195 மில்லியன் யூரோக்கள் பரிசு கிடைத்த நிலையில், இது தொடர்பான ஆள் யார் என்று தேடி வருகின்றனர்.
Also Read | ஒரே பேருந்தில் ஓட்டுநர், டிரைவராக காதல் ஜோடி.. சிலிர்க்க வைக்கும் 20 வருஷ 'லவ் ஸ்டோரி'!!..
வாரத்திற்கு இருமுறை, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் 13 ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள், யூரோ மில்லியன் டிராவில் பங்கேற்று வருகின்றனர்.
இதில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குலுக்கலில் 6, 23, 27, 40, 41 ஆகியவற்றுடன் 2 மற்றும் 12 ஆகிய எண்களும் லக்கி ஸ்டார்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இதில், இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு 195 மில்லியன் யூரோக்கள் பரிசாக விழுந்துள்ளது. மேலும், இந்த குலுக்கலில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய பரிசு தொகை யாருக்குமே விழுந்ததில்லை. இத்தனை மில்லியன் யூரோக்கள் பரிசாக விழுவது இதுவே முதல் முறை என Camelot நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் லாட்டரி வாங்கி பங்கேற்ற நபர்கள் தங்களது எண்ணை சரி பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, அந்த எண்கள் யாருக்காவது வந்திருந்தால், உடனடியாக தங்களின் நிறுவனத்திற்கு அழைக்குமாறும் Calemot நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் சேர்ந்த ஒரு நபருக்கு அடித்த ஜாக்பாட்டின் தொகை, இந்திய மதிப்பில் சுமார் 1593 கோடிக்கு மேலே ஆகும். இந்த ஜாக்பாட்டை வென்றதன் காரணமாக 180 மில்லியன் ஹீரோ சொத்துக்களை வைத்துள்ள சர் டாம் ஜோன்ஸை விட பெரிய பணக்காரராகவும் அந்த நபர் உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை UK வரலாற்றில், சுமார் 15 பேர் மட்டுமே 100 மில்லியன் யூரோக்கள் அல்லது அதற்கு அதிகமாக பரிசாக வென்றுள்ளனர். அப்படி இருக்கையில், இந்த 195 மில்லியன் யூரோக்களை பரிசாக பெற்றுள்ளார் இதுவரை பெயர் தெரியாத நபர். கடந்த மே மாதத்தில், க்ளூசெஸ்டர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஜோ மற்றும் ஜஸ்ட் த்வைட் என்ற தம்பதி, அதிகபட்சமாக 184 மில்லியன் யூரோக்களை இதே லாட்டரியில் பரிசாக வென்றிருந்தனர்.
ஐரோப்பிய வரலாற்றிலேயே, இவ்வளவு பெரிய பரிசுத் தொகை யாருக்கும் கிடைக்காத நிலையில், இத்தனை கோடி ரூபாயை அந்த நபர் இன்னும் வாங்காமல் இருப்பது தான், பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை, வெற்றி பெற்ற எண்ணை அந்த நபர் இன்னும் பரிசோதித்து பார்க்காமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Also Read | "அது மட்டும் இல்லன்னா என்ன ஆகி இருக்கும்??.." பேருந்தில் இப்படி சிக்கிய நபர்.. பதைபதைப்பு சம்பவம்