‘45 நல்ல நம்பர்’.. ‘அதனால 45 வயசு வர விளையாடுவேன்’.. பிரபல அதிரடி வீரரின் வேறலெவல் பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jan 10, 2020 05:21 PM

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், 45 வயது வரை கிரிக்கெட் விளையாட உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

Chris Gayle reveals how long he plans to play cricket

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல் (40) தனது அதிரடி ஆட்டத்தால் உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் டி20 லீக் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர்,  ‘இந்த கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இன்னும் பார்க்க விரும்புகிறார்கள். நானும் விளையாட ஆர்வமாக உள்ளேன். எவ்வளவு நாள் என்னால் விளையாட முடியுமோ, அதுவரை நான் விளையாடுவேன். எனக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் லீக் போட்டிகளில் விளையாட இன்னும் அழைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. உடல் ரீதயாக நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவீர்கள் என கேட்கின்றனர். என்னை பொருத்தமட்டில் 45 நல்ல நம்பர். அதனால் 45 வயது வரை விளையாடுவது எனது இலக்கு. இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’ என கிறிஸ் கெய்ல் பேசியுள்ளார்.

Tags : #CRICKET #CHRISGAYLE