'தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி'... 'நீதிமன்றத்தில் பரபரப்பு சம்பவம்'... வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jul 23, 2019 07:02 PM

அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி, காவலரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Former Democrat judge ordered to jail, dragged out of courtroom

அமெரிக்காவின் ஒஹியோ மாநில நீதிமன்றத்தில், சிறுவர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக இருந்தவர் டிரேசி ஹண்டர். இவருக்கு ஸ்டீபன் எனும் சகோதரர் உள்ளார்.  ஸ்டீபன் மீது இளைஞர் ஒருவரை தாக்கியது தொடர்பாக, டிரேசி நீதிபதியாக இருந்தபோது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் டிரேசி, ஸ்டீபனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் டிரேசி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மேல் முறையீடு மனு, சமீபத்தில் நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது டிரேசியை காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரேசி அங்கிருந்து நகர மறுத்துவிட்டார்.

இதையடுத்து காவல் துறையினர் அவரை தரதரவென இழுத்துச் சென்றனர். பின்னர் டிரேசியின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர் குற்றவாளி இல்லை எனவும் கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #AMERICA