‘நேஷனல் பார்க்கில் வேடிக்கை பார்த்த சிறுமி'... ‘முட்டி தூக்கி வீசிய காட்டெருமை'... பதறவைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jul 25, 2019 10:51 AM

ஆபத்தான காட்டெருமையை அருகில் நின்று ரசித்த 9 வயது சிறுமியை, காட்டெருமை முட்டித் தூக்கி வீசியடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yellowstone Bison Tosses 9 Year Old Girl Into Air

அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியில் உள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிற்கு, கடந்த திங்கள்கிழமையன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அப்போது ஆபத்தான அமெரிக்க காட்டெருமை ஒன்று, அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனை அருகில் நின்று ஏராளமானோர் 20 நிமிடங்களுக்கும் மேல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆவேசமடைந்த காட்டெருமை ஓடிச் சென்று அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது.

அப்போது அருகில் நின்ற வேடிக்கை பார்த்த 9 வயது சிறுமி ஓட முயற்சித்தார். ஆனால் வேகமாக சென்று சிறுமியை, காட்டெருமை முட்டித் தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறுமி அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #AMERICA #YELLOWSTONE #NATIONALPARK