legend updated

'6 வயது மகனுடன், கெஞ்சிக் கதறும் தாய்'... 'அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jul 26, 2019 05:18 PM

மெக்சிக்கோ எல்லையில் நிற்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரிடம், தன் மகனுடன் நிற்கும் ஒரு தாய், கெஞ்சிக் கதறும் சில புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

mother, son pleading soldier to let them enter US

சொந்தநாடுகளில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள், சட்டவிரோதமாக மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுறுவுவது வழக்கம். ஆனால் இதனை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி,  கவுதமாலாவில் இருந்து 1,500 மைல் தொலைவை லெட்டி பெரேஸ் என்ற பெண் கடந்து வந்தார்.

அவர் மெக்சிக்கோ எல்லையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த ராணுவ வீரர்களிடம்,  தன்னையும் தனது 6 வயது மகன் ஆண்டனியையும் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்குமாறு கெஞ்சினார். தனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அளிக்க விரும்புவதாக கூறிய அவர், வீரர் முன் மண்டியிட்டு தேம்பி அழுதபடி கெஞ்சிக்கொண்டிருந்தார்.  இந்த புகைப்படமானது வலைத்தளங்களில் வைரலாகி, காண்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது.

Tags : #MEXICO #AMERICA #HEARTBREAKING