51 மாடி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jun 11, 2019 01:57 PM

அமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Helicopter crashing new york building

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட 11 நிமிடங்களில் 51 மாடி கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட் மேகோர்மேக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த கட்டிடத்தில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து கடந்த 2001 -ம் ஆண்டு இரட்டை கோபுரத்தின் மீது நடந்த தாக்குதலை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகதான் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து மக்கள் அச்சப்பட்டதேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து வானில் அங்குமிங்கும் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags : #HELICOPTERCRASH #AMERICA