‘கொரோனா’ பாதிப்புக்கு பிறகு அதிகரித்துள்ள ‘விவாகரத்துகள்’... வெளியாகியுள்ள ‘ஷாக்’ காரணம்!...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா பாதிப்பிற்குப் பிறகு விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மக்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து கணவன் மற்றும் மனைவி வீட்டில் ஒன்றாக அதிக நேரம் செலவழிப்பதால் அங்கு விவாகரத்து விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் 300க்கும் அதிகமான தம்பதிகள் விவாகரத்து பெற விண்ணப்பித்துள்ளதாக தென்மேற்கு சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்திலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றாக அதிக நேரம் செலவழிப்பதால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் அதிகமாவதே இதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அலுவலகங்கள் திறக்கப்படுவதால் தாமதமாக நிறைய விண்ணப்பங்கள் வந்துள்ளதும் மற்றொரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
