'ரணகளத்திலும் ஒரு ஆறுதல்...' 'இத்தாலியும் தன்னை நிரூபித்தது...' 'கொரோனா' இல்லாத 'நகரை' உருவாக்கி 'சாதனை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 26, 2020 10:28 AM

கொரோனா வைரஸ் இத்தாலியை புரட்டிப்போட்டு வரும் நிலையில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நகரில் கொரோனா முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த நகரம்  கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Italy\'s small town, completely free from Corona

இத்தாலியின் வெனிஸ் நகரத்திலிருந்து 70 கிமீ தூரத்தில் உள்ள சிறு நகரம் வோ. கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி இத்தாலியின் முதல் கொரோனா தொற்று வோ-வில் வசித்த நபருக்கு உறுதி செய்யப்பட்டது.

தற்போது இத்தாலியில் உயிரிழப்பு 7000 த்தை தாண்டியுள்ள நிலையில், வோ நகரில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுளள்து. அங்கு கொரோனாவால் தற்போது எந்த உயிரிழப்பும் இல்லை. புதிய பாதிப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எப்படி சாத்தியப்படுத்தியது வோ நகரம்? என்ற கேள்விக்கு இரண்டு வழிமுறைகளைச் சொல்கிறார்கள் வோ நகரவாசிகள். முதலாவது தனிமைப்படுத்துவது. இரண்டாவது எல்லோரையும் பரிசோதனை செய்வது.

பிப்ரவரி 21-ஆம் தேதி தங்கள் நகரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த வோ நகரவாசிகள், அடுத்த 2 தினங்களில் நகரத்தை முற்றிலுமாக மூடினர்.  3000 குடும்பங்கள் வசித்து வந்த இந்த நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவில் 3 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

லேசான அறிகுறிகளுடன் இருந்தவர்களும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்று இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, மார்ச் 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் மீண்டும் பரிசோதித்தபோது ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மார்ச் 23 ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அங்கு புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. கொரோனா தங்களை தீண்டியபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்ததால் வைரஸை விரட்டியடித்து வெற்றி கண்டிருக்கிறது வோ நகரம்.

Tags : #CORONA #ITALY #WOH CITY #FREE FROM CORONA