ஒரே நாளில் 683 பேர்... '7 ஆயிரத்தை' தாண்டிய உயிரிழப்பு... குவியும் 'சவப்பெட்டிகளால்' திணறும் இத்தாலி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Mar 26, 2020 03:10 AM

இத்தாலியில் 2 நாட்கள் குறைந்திருந்த கொரோனா உயிரிழப்புகள் தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

Italy Records 683 Coronavirus Deaths in a single day

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டு மக்களை புரட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகளால் குவியும் சடலங்களை எரிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு 683 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

சீனா மற்றும் கியூபா நாட்டு மருத்துவர்கள் இத்தாலிக்கு உதவி செய்யும் பொருட்டு களமிறங்கி இருக்கின்றனர். எனினும் தொடர்ந்து இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. .இதுவரை இத்தாலியில் 7 ஆயிரத்து 503 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கின்றனர். தொடர்ந்து குவியும் சடலங்களால் இத்தாலி அரசு அவற்றை எரிக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.