'கடினமான சூழ்நிலையில் இருந்து'.... '2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை'... 'விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்’... மகிழ்ச்சியில் பயணிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 26, 2020 12:06 AM

கொரோனா வைரஸ் தொற்று பரவிய உஹான் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் குறைந்த அளவில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Wuhan restores bus operation after two-month lockdown

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான உஹான் நகரில், கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்ததால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பொது போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து, பொது போக்குவரத்து குறைந்த அளவில் 117 வழித் தடங்களில் மட்டும், அதாவது 30 சதவிகித பேருந்துகள் இன்று காலை 5.25 மணி முதல் ஹான்கூ ரயில் நிலையத்தில் இருந்து துவங்கப்பட்டது.

பேருந்தில் பயணிக்கும் ஓட்டுநரை தவிர, அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட மொபைல் சுகாதார க்யூ ஆர் ஸ்கேன் மூலம் பயணிகளின் வெப்பநிலையை கண்டறிந்து அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று தெரிந்தே பின்னரே பேருந்தில் ஏற்றுவதற்காக ஒவ்வொரு பேருந்திலும் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காற்றோட்டம் இருக்க ஜன்னலை திறந்து வைத்திருக்க வேண்டும். முக கவசம், கையுறைகள் அணிந்து பயணிகளுக்கு இடையில் இடைவெளி விட்டு அமர்ந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும், கிருமி நாசினி  கொண்டு பேருந்துகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு கடந்த 10-ம் தேதி அங்குள்ள உகானில் சூப்பர் மார்கெட் திறக்கப்பட்ட நிலையில், அங்கு பணிபுரிந்த ஷௌ சூஃபென் கூறுகையில், தினமும் 3 மணிநேரம் பைக்கில் சென்று வேலை புரிந்து வந்தேன். ஆனால் இன்று முதல் தொடங்கப்பட்ட பேருந்து சேவை மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் எல்லா வழித் தடங்களிலும் பேருந்துகள் சீக்கிரத்தில் இயங்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  சுகாதார க்யூ ஆர் கோடுகள் இல்லாதவர்கள், குடியிருப்பு சமூக அதிகாரிகள் வழங்கிய ஆரோக்கியத்திற்கான சான்றிதழை எடுத்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் சனிக்கிழமை முதல் 6 மெட்ரோ பாதைகள் திறக்கப்படுவதுடன், ஏப்ரல் 8-ம் தேதி முதல் வெளியூர் பயணத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் எனத் தெரிகிறது.

Tags : #CORONAVIRUS #CORONA #WUHAN #BUS