உலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். கொரோனா உயிரிழப்பில் தற்போது இத்தாலி முதலிடத்தையும், ஸ்பெயின் 2-வது இடத்தையும், சீனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் 196 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் இதுவரை உலகளவில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 9 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 3 லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்குப்பின் 1 லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதனை கீழே பார்க்கலாம்.
1.இத்தாலி - 7,503
2.ஸ்பெயின் - 3,445
3.சீனா - 3,281
4.ஈரான் - 2,077
5.பிரான்ஸ் - 1,331
6.அமெரிக்கா - 889
7.இங்கிலாந்து - 435
8.நெதர்லாந்து - 356
9.ஜெர்மனி - 206
10.பெல்ஜியம் - 178
11.சுவிட்சர்லாந்து - 153
12.தென்கொரியா - 126
13.இந்தோனேசியா - 58
14.பிரேசில் - 50
15.ஜப்பான் - 45
16.துருக்கி - 44
17.ஸ்வீடன் - 44
18.போர்ச்சுகல் - 43
19.பிலிப்பைன்ஸ் - 38
20.டென்மார்க் - 34
21.ஆஸ்திரியா - 30
22.கனடா - 30
23.ஈராக் - 29
24.ஈக்வடார் - 28
25.கிரீஸ் - 22
26.எகிப்து - 21