'உடம்புல தண்ணி பட்டு 67 வருஷம் ஆச்சு...' 'குளிக்காம இருக்குறதுக்கு சொல்லும் விசித்திர காரணம்...' - ஆனா கண்ணாடி வச்சு முகத்தை பார்த்துகிட்டே இருக்கார்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரான் நாட்டில், தெஜ்ஹாக் ((Dejgah))என்ற கிராமத்தை சேர்ந்த 87 வயது முதியவர் அமோவ் ஹாஜி ((Amou Haji))அறியப்படுகிறார். இவர் கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவர் அமோவ் ஹாஜிக்கு, இவருக்கு தண்ணீர் என்றாலே பயம். இதன்காரணமாக சுமார் 67 ஆண்டுகளாக தண்ணீரில் தன் உடலை நனைத்ததில்லை என்று கூறுகிறார். மேலும், குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என்று அமோவ் ஹாஜி நம்புகிறார்.
பல ஆண்டுகளாக குளிக்காத காரணத்தினால், அவரின் உடல் முழுக்க புழுதி படந்து அழுக்காகவே காட்சியளிக்கிறார். ஹாஜியின் உணவு பழக்கமும் வித்தியாசமாகவே இருப்பதாகவும் அக்கிராமத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர், இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை சாப்பிட்டு வருகிறார். தண்ணீரை குளிக்க பயன்படுத்ததான் பயம் என்றாலும், நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.
அவருக்கு அடிக்கடி, தன் முகம் எப்படியிருக்கிறது கார் கண்ணாடி ஒன்றை தன் கையில் வைத்து பார்த்துக் கொள்வராம். உடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் மூடி வெட்டுவதற்கு பதிலாக, தன் முடியை தீயை வைத்து கருக்கிக் கொள்வதாகவும் கூறுகிறார் முதியவர் அமோவ் ஹாஜி.

மற்ற செய்திகள்
