'ஆபாச இணையத்தில் அமெரிக்க தொழிலதிபர் பார்த்த வேலை!'.. 'வாட்ஸ் ஆப் உரையாடல்களால்' 1,25,000 பவுண்டுகளைக் கறந்த பிரிட்டன் இளம் பெண்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க தொழிலதிபர் ஆபாச இணைய பக்கத்தின் வழியே பிரிட்டனை சேர்ந்த இளம் பெண்ணால் மிரட்டலுக்கு உள்ளாகி ஒரு லட்சத்து 25 ஆயிரம் பவுண்டுகள் தொகையை இழந்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.

பிரிட்டனில் தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்கத் தொழிலதிபர் ஆபாச இணையப்பக்கத்தில் பதிவு செய்து இருந்துள்ளார். அதில் மான்செஸ்டரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவருடைய தொடர்பு இவருக்குக் கிடைத்ததையடுத்து, ஆர்வமிகுதியால் அந்த இளம்பெண்ணிடம் வாட்ஸ்அப் மூலமாக இவர் சாட்டிங் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணும் இவரைப் பற்றி முழு விபரமும் சேகரித்துக் கொண்டார். பின்னர் சமூக அந்தஸ்துடன் வாழும் தொழிலதிபர் என்பதால் தங்களுக்குள் நடந்த இந்த ஆபாச உரையாடலை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் இந்த தொழிலதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அதற்கு அந்த இளம் பெண், பணம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் பயம் காரணமாக கடந்த 2019 மே மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அப்பெண்ணுக்கு அளித்துள்ளார். ஆனால் அதற்குப் பின்னரும் இந்த உரையாடல்களை தொழிலதிபரின் மனைவியிடம் பகிர்ந்து விடுவதாக கூறி அப்பெண் மிரட்டியதை அடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அந்த அமெரிக்க தொழிலதிபர் அப்பெண்ணுக்கு பணம் தந்துள்ளார்.
இதுவரை மொத்தமாக 1 லட்சத்து 25 ஆயிரம் பவுண்டுகள் அவர் தந்துள்ள நிலையில் தனியார் புலன் விசாரணை குழுவிடம் தமது நிலையை எடுத்துக் கூறி அந்தப் பெண்ணின் தகவல்களை சேகரிக்கவும் அவர் முனைந்துள்ளார். இறுதியில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் அப்பெண்ணுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த மான்சிஸ்டர் பெண்ணுக்கு எதிராக, துன்புறுத்ததுல் மற்றும் தனிப்பட்ட தகவலை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
