VIDEO: இந்த 'லாக்டவுன்'ல 'யூடியூப்' சேனல் ஸ்டார்ட் பண்றீங்களா?.. இவரோட ஐடியா எப்படி இருக்கு!? OVERNIGHT-ல ஒபாமா ரேஞ்சுக்கு வைரலான இளைஞர்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசிய நபர் ஒருவர் 2 மணி நேரமாக சும்மாவே இருக்கும் வீடியோ ஒன்று யூடியூபில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் வியூவ்ஸ், லைக்ஸ் வருவதற்காக பெரும்பாலானோர் பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஒரு சிலர் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்து பாராட்டுக்களை பெறுகின்றனர். ஒரு சிலர் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆகின்றனர். எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும், எப்படி நாற்காலியில் அமர வேண்டும் என பல வீடியோக்களை யூடியூபில் பார்த்திருப்போம். அதில் ஒருவர் சற்று வித்தியாசமாக 2 மணி நேரம் சும்மாவே இருந்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
இந்தோனேசியவை சேர்ந்த முகமது திடிட் என்பவர், கேமரா முன் அமர்ந்து அதனை வெறித்து பார்த்துக் கொண்டு 2 மணி நேர பொழுதைக் கழித்துள்ளார். இதில் ஒரு ஆச்சரியான விஷயம் என்னவென்றால், அந்த வீடியோவை 1.9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். விதவிதமாக கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. அவர் எப்படி இத்தனை மணி நேரம் எதுவும் செய்யாமல் கேமராவை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், அவரது மனதில் என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு சிலர் அவர் எத்தனை முறை கண்களை சிமிட்டினார் என நகைச்சுவையுடன் கூறி வருகின்றனர்.
இந்த வீடியோ தொடர்பாக முகமது திடிட் தனது பதிவில், 'இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை உங்களுக்கு கூறுகிறேன். இந்தோனேசிய இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையிலான வீடியோவை வெளியிடுமாறு பலரும் கூறினர். அதனால் கனத்த இதயத்துடன் இந்த வீடியோ எடுத்தேன். இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்டால் அது பார்வையாளர்களான உங்களை பொறுத்தது' என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
