'300' கொழந்தைங்கள சீரழிச்சுருக்காரு... சில நேரம் அடிச்சு 'கொல' கூட பண்ணிடுவாரு... 'லேப்டாப்' ஆதாரங்களை கண்டு அதிர்ந்து போன 'போலீசார்' ... கொடூரன் ‘பரபரப்பு’ கைது!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்தா என்னும் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து சுமார் 60 வயதான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடைய அறையில் இருந்து இரண்டு சிறுமிகளையும் மீட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்தோனேசியாவில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவரிடம் நெருக்கமாக இருக்க மறுப்பவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்கோயிஸ் என்ற அந்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கு இவர் ஆளாகியுள்ள நிலையில், சிறையில் ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கி சூடு மூலம் மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து, பிரான்கோயிஸ் லேப்டாப்பை போலீசார் சோதனை செய்த போது, சுமார் 10 முதல் 17 வயதிலான குழந்தைகளுடன் அவர் தவறான முறையில் ஈடுபடும் பல வீடியோக்களை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர்.
முன்னதாக, குழந்தைகளிடம் நைசாக பேசி தன்னருகில் அழைப்பார். பின்னர் அவர்களுடன் தவறான முறையில் ஈடுபடுவார். அப்படி ஒப்புக் கொள்ள மறுக்கும் போது அந்த குழந்தைகளை அடித்து துன்புறுத்தி தவறான செயலில் ஈடுபடுத்தியும் உள்ளார். இதில் சில குழந்தைகள் இறந்து போனதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்தோனேசியாவில் இருந்து கொண்டு அவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆண்டுதோறும், இந்தோனேசியாவில் 70,000 குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக உலகளாவிய கடத்தல் தடுப்பு வலையமைப்பு ECPAT தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
